Wednesday, January 9, 2013

மாலை 6 மணிக்கு சாப்பிடக்கூடாது.. ஏன்?

                        
                             கருக்கல் வேளை வந்திருச்சு! இப்போது சாப்பிடாதே, வாசல்படியில் உட்காராதே என்று அக்கால பெரியவர்கள் சொல்வார்கள். ஏன் தெரியுமா? மாலை 6 மணிக்கு தான், நரசிம்மரால் வதம் செய்யப்பட்டான் இரணியன். அவனை மேலே எங்கேயும் வைத்துக் கொல்ல முடியாது, கீழே நல்ல இடங்களில் வைத்தும் கொல்ல முடியாது. எனவே இரண்டும் கெட்டானாக வாசல்படிக்கு தூக்கி வந்து அமர்ந்த நரசிம்மர், வயிற்றைக் கிழித்து குடலை சாப்பிட ஆரம்பித்து விட்டார். சர்வ சாதுவான ஸ்ரீமன் நாராயணனே, இப்படி செய்கிறார் என்றால், அவருக்கு எவ்வளவு கோபம் இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. இந்த காரணத்தால், மாலையில் சாப்பிடும் உணவு நரமாமிசத்துக்கு சமமாகக் கருதப்படுகிறது. வாசல்படியில் உட்கார்ந்தால் ஆயுள் குறையும் என்பதும் ஒரு கருத்து.
மேலும்.. இரவு உணவை, 9 மணிக்குள் சாப்பிட்டுவிடுவது மிகவும் நல்லது. இரவு உணவை பாலில்தான் முடிக்க வேண்டும். பாலுக்குப் பிறகு எதையும் சாப்பிடக்கூடாது. பகல் உணவில் திடம் அதிகமாகவும் திரவம் குறைவாகவும் இருக்க வேண்டும். இரவு உணவில் திடம் குறைந்தும் திரவம் அதிகமாகவும் இருக்க வேண்டும். கிழங்கு போன்ற கனமான பொருட்களை இரவில் தனித்துப் பயன்படுத்தக் கூடாது. அதை சீக்கிரமே ஜீரணிக்க உதவும் பொருட்களோடு சேர்த்து சாப்பிட வேண்டும். தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே உணவு உண்பது கொள்வது நல்லது.

No comments:

Post a Comment