Thursday, February 23, 2012

கவலையைப் போக்குபவர் கடவுளைத் தவிர யார்? -கேட்கிறார் வள்ளுவர்

                                           
 நம் கவலைகளை பிறரிடம் கூறுவதால் பயன் கிடைக்காது. மாறாக சிலருக்கு வேடிக்கையாகவும்,  சிலருக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
* இறைப்பற்று இல்லாமல் மனக்கவலையை போக்க முடியாது, சில கவலைகளை மட்டும் நாம் மற்றவர்களிடம் கூறலாம். சில மனக் கவலைகளை வெளியில் கூற முடியாது.அப்போது இறைவனைவிட்டால் மனக்கவலையைப் போக்க வேறுவழியில்லை.
* நடுநிலை தவறி யவரும் செல்வத்தை விட்டுவிட வேண்டும், செல்வம் அவசியம். கெட்ட வழியில் இல்லாமல், நல்ல வழியில்  சம்பாதித்தசெல்வமாக இருக்க வேண்டும்.
* ஐம்புலன்களை அடக்கும், மனவடக்கம், நாவடக்கம் போன்ற நல்ல இயல்புகளை அடக்கி ஆள்பவர்கள் தேவனாக முடியும்.
* பொறாமை கொள்வது பாவச்செயலாகும். செல்வத்தை அழிப்பதுடன், நரகத்தில் சேர்க்கும். பொறாமையால் உயர்ந்த வரும் இல்லை, பொறாமை இல்லாதவர் கெட்ட வரும் இல்லை.
* நம்மிடமும் குற்றம் உண்டு, பிறரிடமும் குற்றம் உண்டு. இதை உணர்ந்து வாழ்ந்தால் உலகில் துயரம் ஏற்படாது.
* தன் எண்ணத்தை பிறர்க்கு வெளிப்படுத்த பேச்சு ஒரு சாதனமாகும். பேச உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதும் நாக்கே. இந்த நாக்கு சில நேரங்களில் மிகப் பெரிய விரோதியாகவும் மாற்றிவிடும்.
* நன்மை செய்தால் நன்மையும், தீமை செய்தால் தீமையும் விளையும் என்பது பிறர் கூறி தெரிய வேண்டியதில்லை. இயன்ற வரை நன்மை செய்வோம். இயலாத போது தீமையாவது செய்யாமல் இருக்கலாம்.

No comments:

Post a Comment