Thursday, February 23, 2012

இளமையிலேயே ஆன்மீகத்தைப் படி - உத்தரவிடுகிறார் சின்மயானந்தர்

                                 
                 * இறைவனால் மட்டுமே   உங்களை சிறந்தவர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் நாட்டுக்கும், உன்னதமான இந்தியப் பண்பாட்டிற்கும் இந்து மதத்திற்கும் தொண்டாற்றக் கூடியவர்களாக உருவாக்க முடியும்.
* மனிதனது வாழ்க்கைச் சிக்கல்களை அன்பு ஒன்று தான் தீர்க்கக் கூடிய தன்மை வாய்ந்தது.
* நாம் பொதுவாக, பிறர் நம்மை நேசிக்கவே காத்திருக்கிறோம். அவர்களின் அன்பு கிடைக்கவில்லை என்றால் நாம் மனவருத்தமும்,
துன்பமும் அடைகிறோம்.
* இன்பத்தை நாடி செல்பவன் கல்வியை இழந்து விடுகிறான். கல்வியை நாடுபவன் தேவையற்ற இன்பத்தை துறக்கிறான். இன்பத்தை  தேடுபவனுக்கு கல்வியில்லை, கற்பவனுக்கு இன்பம் நுகர நேரம் இல்லை.
* சுற்றியுள்ள வாழ்வில் குன்றாத ஊக்கத்துடனும், சேவை செய்யும் சிந்தனையுடனும், துணிவுடனும் ஈடுபடுத்திக் கொள்வதே கண்ணன் காட்டிய வழியாகும்.
* வயதான பிறகு தான் ஆன்மிக நூல்களைப் படிப்பது என்று வைத்துக் கொள்ள வேண்டாம். பார்வையும் அறிவுக்கூர்மையும் மழுங்கி உடலில் சோர்வு கண்ட பிறகு ஆர்வம் இருக்காது. இளமைப் பருவமே அதற்கு மிகவும் உகந்தது.
* ஒரே மனிதனிடம் நான்கு விதமான மனநிலைகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். இவை பூச்சிகள் நான்கு புறமும் வருவதைத் தமது நுனிகளை நீட்டித் தெரிந்து கொள்வதைப் போல, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவி செய்கின்றன.
* பிறரின் மகிழ்ச்சியில் வெளிப்படையான இன்பம் அடைய லாம். பிறருடைய துன்பத்தில் உண்மையாய் பங்கு கொள்ள வேண்டும்.
* சக்கரங்கள் சுழலத்தான் வேண்டும். அதனைப் போல சரியான  பாதையில் வாழ்க்கையை திருப்பிவிடத்தான் வேண்டும்.'

No comments:

Post a Comment