உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதில் பிரார்த்தனைக்கு இணையாக வேறு எதுவும் இல்லை. மனிதனை உயர்த்தும் தன்மை அதற்கு உண்டு.கூட்டுப்பிரார்த்தனையால் விரைவில் பலன் கிடைக்கும்.
* நாம் அனைவரும் சகோதரர்கள். கடவுளே நம் தந்தை. இதை ஒப்புக்கொள்வோர், எங்கு சென்றாலும் அவரை மக்கள் பின்பற்றி செல்வர்.
* பிரார்த்தனை செய்பவர்களுக்கு ஸ்லோகம் தெரியாமல் இருக்கலாம். வடமொழியோ, பாடல்களோ தெரியாமல் இருக்கலாம். ஆனால், ராம நாமம் அனைவருக்கும் சொந்தமானது. இதை எல்லாரும் எளிமையாக சொல்லலாம். பல்லாண்டுகளாக வாழையடி வாழையாக வந்த சொத்தாகும்.
* தினமும் மாலையில் ஒன்று கூடி பக்திப்பாடல்கள், கீதையிலிருந்து சில ஸ்லோகங்கள் ஜெபித்து வந்தால், மனத்தூய்மையும், நிம்மதியும் உண்டாகும்.
* பிரார்த்தனையில் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் ஈடுபடுவது கூடாது. மனப்பூர்வமாக ஈடுபட்டால் மட்டுமே பலன் ஏற்படும்.
* நல்லவர்களின் லட்சியம் தோற்றதாக சரித்திரம் இல்லை.
* ஆரோக்கியம் உள்ள ஒவ்வொருவரும் உணவைச் சம்பாதிப்பதற்கு வேண்டிய அளவுக்கு ஏதாவது வேலை செய்வது அவசியம்.
* ஒவ்வொருவரும் தன் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துப் பிழைத்தால் இம்மண்ணுலகம் விண்ணுலகமாக மாறிவிடும்.
நல்லவர்களோடு ஒத்துழைப்பது எப்படி நம் கடமையோ, அப்படியே தீயவர்களோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பதும் நம் கடமையாகும்.
* பணத்தைவிட அறிவு உயர்ந்தது. அறிவைவிட ஒழுக்கமே உயர்ந்தது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
* ஆசிரியர்கள் ஒழுக்கத்தைப் பாடப்புத்தகத்திலிருந்து கற்றுக் கொடுக்க முடியாது. தங்களுடைய நடவடிக்கைகளிலிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும்.
* பக்தனுக்கு எந்தவிதமான துன்பம் ஏற்பட்டாலும் உடனே வந்து உதவி செய்ய கடவுள் ஒருநாளும் தவறுவதே இல்லை. இதற்கு தேவை கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை.
* கடவுள் நாம் செய்யும் நன்மை தீமைகளுக்குச் சரியான கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு இணையான கணக்குப் பிள்ளை உலகில் கிடையாது.
* பிறருக்குத் தவறாகத் தோன்றினாலும் தனக்குச் சரியாகத் தோன்றுவதைச் செய்வதே கடமையை நிறைவேற்றுவதற்கான சரியான வழி.
* கடவுள் என்னும் சக்தி வர்ணனைக்குள் அடங்காத ஒன்றாகும். மனிதன் வர்ணிக்க வேண்டிய அவசியமும் அதற்குக் கிடையாது.
* குழந்தைகள் கையை உபயோகிக்கும் முன்பு, கண்ணையும் காதையும் நாவையும் உபயோகிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
* நாம் கடவுளுடைய நாமத்தை முழு மனதுடன் பூஜித்தால் நம்மிடம் உள்ள ஆசை, பொய் முதலிய சகல துர் குணங்களும் தாமாகவே அகன்று விடும்.
No comments:
Post a Comment