சுத்தமாக இருங்கள்.
சுத்தமான ஆகாரத்தை சாப்பிடுங்கள்.
இதைச் செய்தாலே அறிவு பிரகாசிக்கும்.
ஹரிபக்தி செய்யுங்கள். ஹரிநாமம் சொல்வோருக்கு மறுபிறப்பு இல்லை.
மனமே! இன்றைய தினம் உன் தினம்.
இன்றைய பொழுது நல்ல பொழுது.
இதற்குப் பின்வரும் தினங்கள் எப்படியிருக்குமோ தெரியாது. இந்த நல்ல பொழுதில் ஹரியைத் தியானம் செய். அவன் கிருபை செய்வான். அவன் அருள் இருந்தால், நீ நன்றாக வாழ்வாய்.
நாளை பக்தி செய்யலாம் என்று நாளை தள்ளிப்போடாதே. அப்படி செய்தால் மோசம் போய்விடுவாய். நாளைய பொழுதை நிர்ணயிக்க நாம் யார்! நாளைய தினம் நிச்சயமில்லை. ஒருவேளை, நீ நாளை இருந்தாலும், நேரம் கிடைக்காமல் போய்விடலாம். எனவே இன்றே, இப்போதே ஹரிஹரி என்று சொல்.
நீ எதைச் சமைக்கிறாயோ, அதைச் சுடச்சுட சிறிதை சுவாமியின் கைகளில் படுவது போல் பாவனை காட்டு, பிறகு உணவைச் சாப்பிடு.
இப்படி செய்பவர்கள் பூஜைக்குரியவர்கள்.. அதாவது வணங்கத்தக்கவர்கள். இப்படி சாப்பிட்டாலே, உங்களுக்கு மறுபிறப்பு அறுபட்டு போகும்.
பகவானுக்கு காண்பிக்காமல் சாப்பிடுவது திருடுவதுபோலாகும். இவ்வாறு பக்தி செலுத்த எந்தச் செலவும் கிடையாது, எந்தச் சிரமமும் கிடையாது.
காலையில் எழும்போது ஹரிஹரி என்று சொல்லி எழுங்கள். தாழியிலிருந்து வெண்ணெய்யைத் திருடி உண்டவனும், மண்ணை உண்டு அன்னையிடம் தன் அழகு வாயைத் திறந்து காட்டியவனும், வானத்தையே வாயில் போட்டுக் காட்டியவனுமாகிய தேவகி மைந்தனே வா! வசுதேவரின் மகனே வா! என்று அவனைப் புகழ்ந்து பேசுங்கள்.
எழும்போதும், அமரும்போதும், நடக்கும்போதும் நாராயணா என்று சொல்லுங்கள். அந்த நாராயணனின் நினைவு எப்போதும் உங்கள் உள்ளத்தில் இருக்கட்டும்.
இந்த உடம்பு நோயினால் அழிந்து போகும். பயத்தினாலோ, அதிர்ச்சி யினாலோ அழிந்து போகும். எப்படியோ, இது அழியப் போவது திண்ணம். ஆதலால், நீ இப்பொழுதே நான் சொல்வதைக் கேள். தியானத்தில் ஆழ்ந்து இறைவனைக் காண்பாயாக. பெரும்வியாதியான பிறத்தல், இறத்தல் நீங்கிப்போகும்.
மனதை இறைவனோடு இணைத்துக் கொள். இடைவிடாது அவரை பற்றி சிந்தனை செய். கடவுளை எட்டிப் பற்றிக்கொள். இவ்வுயிருக்கு அமைதியை அவர் அளித்தருள்வார்.
உன்னால் புண்ணியம் தேட முடியவில்லையா! சரி போகட்டும். நீ புண்ணியமும் செய்ய வேண்டாம், பாவமும் செய்ய வேண்டாம். இரண்டுமே வேண்டாமப்பா! ஆனால், ஒன்றை மறந்து விடாதே! பகவானை விட்டுவிடாதே. தங்கத்தேவனான ஸ்ரீமந் நாராயணனை விட்டு விடாதே. மூச்சோடு மூச்சாகப் பற்றிக்கொள். மூச்சுக்கு மூச்சு அவன் திருநாமத்தைச் சொல்லு. அவ்வாறின்றி வீணாக நாளைக் கடத்தாதே. இறைவனை வணங்காத நாள் வீணான நாளே!
உன் நாக்கு இனிய சொற்களை மட்டுமே பேச வேண்டும். பயனற்ற சொற்களை அறவே தவிர்க்க வேண்டும். இறைவனின் திருநாமத்தைச் சொல்லும் நாக்கே நல்ல நாக்கு.
பேசியே சிலர் காலத்தை கழித்து விடுகின்றனர். இதனால் என்ன லாபம்? பயனற்ற பேச்சை விட்டு விடுங்கள். அவ்வாறு வீண் அரட்டை செய்யும் நேரத்தில் இறைவன் நாமத்தைச் சொல்லுங்கள். முன்வினை தீர்ந்து வாழ்வில் நன்மை பெறுவீர்கள். எப்போதும் இறைவன் தோன்றாத் துணையாக உங்களோடு இருந்து அருள்வார்.

No comments:
Post a Comment