Wednesday, March 21, 2012

அறிவுரை

                                    
4 குறைகள்

1. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை
2. வீட்டின் குறை பழுது பாராமை
3. அழகின் குறை சிரத்தை இன்மை
4. காவலாளியின் குறை கவனக்குறைவு


7 நன்முத்து

1   சோம்பலை உடனே ஒதுக்கித்தள்ளு.
2. குழந்தை உள்ளத்துடன் வாழ கற்றுக்கொள்
3. கோழைத்தனத்தை பள்ளத்தாக்கிற்குள் எறி.
4. சிந்தனை ஆற்றல் உள்ள மூளை மட்டும் போதும்.
5. பலவீனம் என்ற சொல்லை அகராதியில் எடுத்து விடு
6. ஆறறிவையும் பயன்படுத்தி ஆற்றலுடன் திகழ்.
7. வேலை செய்யும் கைகளை மட்டும் வைத்துக் கொள்.



1  பேராசை, பெருவிருப்பம் கொள்ளாதே
2. எந்தக் கவலைக்கும் இடமளிக்காதே
3. சுக போகங்களில் மூழ்கி விடாதே
4. பிறரிடம் பொறாமை கொள்ளாதே
5. சோம்பலை நுழைய விடாதே
6. சுறுசுறுப்போடு உழைத்துக் கொண்டிரு
7. பிறர் பொருளைப் பறிக்க நினைக்காதே



1. வீண் பேச்சு பேசாதே
2. ஒழுக்கத்தைப் பேணு
3. நல்லவனாக வாழ்
4. கெட்டவனுடன் சேராதே
5. பேச்சில் இனிமை சேர்
6. ஆராய்ந்து செயலில் இறங்கு
7. பொய்யை மெய்யாக்காதே!


9 கட்டுப்பாடுகள்

1. உணவைக் குறை; நாக்கைக்கட்டுப்படுத்து.
2. சவாரியைக் குறை; அதிகமாக நட.
3. கவலையைக் குறை; சிரித்துப் பழகு.
4. சோம்பலைக் குறை; நன்றாக வேலை செய்.
5. பேச்சைக் குறை; அதிகமாய் சிந்தி.
6. செலவைக் குறை; அதிகமாய் தானம் செய்.
7. திட்டுவதைக் குறை; அதிகமாய் அன்பு காட்டு.
8. உபதேசத்தைக் குறை; செயலை அதிகரி.
9. கெட்ட பழக்கத்தை விடு; நல்லதை கடைபிடி



No comments:

Post a Comment