Monday, March 19, 2012

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்கிறார்களே! உடனே தெய்வம் தண்டிக்காதது ஏன்?

                                           


                         காலம் என்னும் நியதியின் அடிப்படையில் தான் வாழ்க்கை நிகழ்கிறது. நாம் அனுபவிப்பது நல்லதோ, கெட்டதோ அதற்கு மூலமுதற்காரணம் நாம் தான். வித்தில்லாமல் மரம் முளைப்பதில்லை. ஆனால், விதைத்தவுடன் பலன் கிடைப்பதில்லை. அதற்கான காலம் கனிந்தவுடன் மரம் பூக்கிறது. காய்க்கிறது. கனிகளைத் தருகிறது. அதுபோல, நாம் செய்த செயலுக்கான பலனை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இதையே தீதும் நன்றும் பிறர் தரவாரா என்று நம் முன்னோர் குறிப்பிட்டுள்ளனர். காலதேவனின் கணக்கிற்கு எட்டாத விஷயம் எதுவுமில்லை. அவன் கண்ணிலிருந்து யாரும் தப்பமுடியாது. இதையே எல்லாம் காலம் பார்த்துக் கொள்ளும் என்று சொல்வார்கள்.
                                                        

No comments:

Post a Comment