காசி யாத்திரை சென்று வந்தவர்கள் தங்களுக்கு விருப்பமான இலை, காய், பழம் மூன்றையும் இனி சாப்பிடுவதில்லை என்று உறுதியெடுத்து வருவார்கள். காசிக்குப் போனீங்களே! எதை விட்டு வந்தீர்கள்? என்று ஆர்வத்துடன் கேட்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால்,வெறும் சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் இவ்வாறு விட்டுக்கொடுப்பதால் காசி சென்று வந்த பலன் கிடைக்காது. மனிதனிடம் காம(ஆசை), குரோத (பொறாமை), லோப (கஞ்சத்தனம்)எண்ணங்கள் மலிந்து கிடக்கின்றன. காசி யாத்திரையின் நோக்கமே, இந்த தீயகுணங்களில் இருந்து நாம் மீள வேண்டும் என்பது தான். காசி, பிரயாகை யாத்திரை முடியும் போது , காசி, பிரயாகைக்கு யாத்திரை வந்தேன். பிதுர் தர்ப்பணத்தை நிறைவேற்றி விட்டேன். இனி, என் வாழ்வு அமைதியாகச் செல்ல வேண்டும். இறைவனே! உன் திருவடியை அடைவதற்கு உதவியாக என் தீயகுணங்களை என்னைவிட்டு நீங்கச் செய்வாயாக என்று வேண்டுகோள் வைக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான், இலை,காய்,பழம் மூன்றையும் விட்டு விடும் சடங்கு உருவாக்கப்பட்டது.
Wednesday, March 14, 2012
மூன்றுக்கும் விடை கொடுங்க!

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment