Wednesday, February 22, 2012

மனிதப்பிறவி எதற்காக?

                                      
            உயிர் தங்குவதற்காக இறைவனால் உடல் தரப்பட்டுள்ளது. உயிர்களிலேயே மனிதஉயிரே மகத்தானது. உயர்ந்தது. மற்ற உயிர்கள் எல்லாம் பிறப்பது வெறும் கர்மவினைகளை மட்டும் அனுபவிப்பதற்கே. மனிதர்களுக்கு மட்டுமே புதிய வினைப்பயன்களைத் தேடிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாய்ப்பினால் நல்வினைகளையும் தேடலாம். தீவினைப்பயன்களையும் தேடலாம். இதுதான் மனிதனுக்கும், மற்ற உயிர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடாகும். மனித உடல் ஓடத்தைப் போன்றது. ஏராளமான புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே மனிதப்பிறவி எடுக்கமுடியும். பிறவி எனும் பெருங்கடலைக் கடப்பதற்காகவே இப்பிறவியைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த உடலாகிய ஓடம் நிலையானதல்ல. சீக்கிரமே உடைந்து விடும். பிறவிக்கடலைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல. இதற்கு முன்பு எத்தனை முறை உடல் எனும் ஓடத்தைப் பெற்றும் நம்மால் பிறவிக்கடலைக் கடக்க முடியாமல் தோற்றுப் போயிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியாது. நாம் இப் பிறவியிலேயே இறைவனை முயன்று சேராது விட்டால் அடுத்து என்ன பிறவி வாய்க்குமோ தெரியாது. மீண்டும் புழு, பூச்சி, பறவை, விலங்கு என்று பல பிறவிகளை எடுக்க வேண்டி வரலாம். எனவே, இப்பிறவியிலேயே இறைவனை சரணாகதியாகப் பற்றுங்கள். பிறப்பில்லா நிலையை அடைவதே தம் தலையாய கடமையாகும்.

No comments:

Post a Comment