நல்லவர்களை நேரில் காண்பதும், அவர்களின் அறிவுரைக்கேட்பதும், அவர்களோடு இணைந்து பழகுவதும், அவர்தம் நற்குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நமக்கு நன்மை தரும் செயலாகும்.
* பெரிதாக மடல் கொண்ட தாழைக்கு மணம் இல்லை. ஆனால், சிறிய இதழ்களைக் கொண்டிருந்தாலும் மகிழம்பூவிற்கு நிறைய மணம் உண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் குடிப்பதற்குப் பயன்படாது. கடல் அருகே மணற்குழியில் சுரக்கும் ஊற்றுநீர் சிறிதாக இருந்தாலும் உண்பதற்கு பயன்படும்.
* பொன்னால் செய்த குடம் உடைந்த பின்னும் பொன்னாகப் பயன்படும். அதுபோல, சிறந்த பண்புகளுடைய செல்வந்தர் வறுமை நிலையை அடைந்தாலும் முன்புபோலவே தன்முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார்கள்.
* நோய் உடலோடு பிறந்தே இவ்வுடலை அழிக்கிறது. அதுபோல, உடன்பிறந்தவர்களும் நமக்கு தீங்கு செய்யலாம். எங்கோ மலையில் இருக்கும் மூலிகை நோயைப் போக்குவதுபோல நமக்கு உறவில்லாமல் எங்கோ ஓரிடத்தில் பிறந்தவர்கள் கூட நமக்கு உதவி செய்வதும் உண்டு.
* கல் பிளவு பட்டால் மீண்டும் ஒன்று சேராது. அதுபோல, கடுமையான கோபத்தால் பிளவுபட்ட கீழ்மக்கள் மீண்டும் ஒன்று சேரமாட்டார்கள். நீரில் உண்டான பிளவு அந்த நிமிஷமே ஒன்று கூடிவிடுவதைப்போல, அறிவில் சிறந்தவர்களின் கோபமானது தோன்றிய அந்த அளவிலேயே மறைந்துவிடும்.
No comments:
Post a Comment