Wednesday, February 8, 2012

பெண்களுக்கு அழகு எது?

                            
*பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின்  அன்பையும் உதறித் தள்ளுவதே  அறிவுடைமை.
* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய  வேண்டும்.
* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான  வழி முறையாகும்.

* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக்  காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக்  காப்பதே பெண்ணுக்கு அழகு.
* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல்  நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி  ஏற்படுத்தித் தரும்.
* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.
- அவ்வையார்

No comments:

Post a Comment