மனித மனம் லாவகமாக கையாளப்பட வேண்டிய கருவி. சரியான எண்ணங் களை அதில் புகுத்தினால் ஒழிய அதனை முறையாக இயக்க முடியாது. இன்று நம்மில் பெரும்பாலான வர்கள் வாழ்வில் விலக்க வேண்டிய விஷயங் களையே திரும்பத் திரும்ப சிந்தித் துக் கொண்டிருக்கும் தவறைச் செய்கிறார்கள். தேவையான எண்ணங்கள் மனதில் புகத் தொடங்கினால், தேவையில்லாதவை தானாகவே விலகி விடைபெற்றுவிடும். மனதை, மின்சார சாதனங்களைப் போல தேவைப்பட்டால் இயக்கவும், இல்லையென்றால் நிறுத்தவும் முடியும். ஆனால், அந்த அளவுக்கு ஆளுமைப்பண்பு நம்மிடம் இருக்கவேண்டியது அவசியம். பிச்சைப் பாத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் என்ன விழப்போகிறது என்று எதிர்பார்ப்பது போல, உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று சிலர் ஜோதிடத்தை நம்பி காத்திருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் அமைக்கவேண்டும். இன்னும் சொல்லப் போனால், உங்களை எப்படி வடிவமைக்கிறீர்களோ அதைப் பொறுத்தே உங்களைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கை, இந்த சமூகத்தின் வாழ்க்கை அனைத்துமே அமையப் போகிறது. மனிதன் தன் கையில் எதுவும் இல்லை என்று ஏங்கிக் கொண்டு இருந்தால் ஒரு பயனும் விளையாது. நம்மிடம் இருப்பதை சிறப்பாக பயன்படுத்தத் தொடங்குவதே வெற்றிக்கான வழியாகும். எந்த ஒன்றையும் பதட்டத்தோடு அணுகும் போது நம்முடைய மன ஆற்றல் குறைந்து விடும். செயல்திறன் மங்கிவிடும். ஆனால், நிதான புத்தியுடன் செய்யும்போது சிறப்பாக செய்ய முடியும். வாழ்க்கையோடு நாம் விளையாடவேண்டுமே ஒழிய, வாழ்க்கை நம்மோடு விளையாட அனுமதிக்கக் கூடாது. முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்விலும் இது சாத்தியமான ஒன்று தான். வேண்டும் வேண்டாம் என்ற எதிர்பார்ப்புகளே எந்த ஒரு விஷயத்திலும் ஏமாற்றத்தை உண்டாக்குகின்றன. வாழ்க்கையை அதன் இயல்போடு முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது, மகிழ்ச்சிக்குறைவு உண்டாகாது
Showing posts with label SRI JAGGI VASUDEV. Show all posts

Sunday, June 19, 2011
வாழ்க்கையோடு விளையாடுங்கள் சொல்கிறார் ஜக்கி வாசுதேவ்
உன் வாழ்க்கை உன் கையில்
பொதுவாகவே நிர்வாகம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் உங்களில் பலர், வணிக நிர்வாகத்தையும், தொழில் நிர்வாகத்தையுமே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அடிப்படையில், வாழ்க்கையே நிர்வாகம் தான். உள்நிலையிலோ, புறநிலையிலோ நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணினால் அது உங்களை நீங்களே எப்படி நிர்வகிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். உங்கள் உடல், மனம், உணர்வுகள், சூழ்நிலைகள், சமூகம், தேசம், உலகம், வாழ்க்கையின் தரம்... எல்லாமே நீங்கள் உங்களை எவ்வளவு திறம்பட நிர்வகிக்கிறீர்களோ என்பதைப் பொறுத்தே உள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இன்றைய உலகில் அனைத்துமேபொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகிறது. வாழ்வின் மற்ற அம்சங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றன. பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் போது, மகிழ்ச்சி பலவழிகளில் தொலைந்து விடக்கூடும்.
உலகின் மிகப்பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் மேல்நிலை நிர்வாகிகளுக்கு யோகவகுப்புகள் எடுக்கிறபோது ஒன்றை கவனித்திருக்கிறேன். வாழ்வில் தோல்வி அடைந்தவர்கள் தோல்வியின் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களும் பாதிப்பை அடைகிறார்கள். தோல்வியின் பாதிப்பை அனுபவிப்பது புரிந்து கொள்ளக் கூடியது. ஏனென்றால், தோல்வி எளிதில் வரும். ஆனால்வெற்றி பெற்றவர்களும் பாதிக்கப் படுவது துயரம் தருகிற விஷயம். ஏனெனில், வெற்றி அவ்வளவு எளிதில் வருவதில்லை. நீங்கள் வாழ்வில் எதை அடைய விரும்பினீர்களோ, அந்த வெற்றியை அடைந்த பிறகு, அதனால் பாதிப்பிற்கு ஆளாகிறீர்களென்றால் அதுதான் வாழ்வின் உண்மையான துயரம்.
இன்று உலகில் பெரும்பாலானோர் தங்கள் வெற்றிகளால், பாதிப்பிற்குத்தான் ஆளாகி இருக்கிறார்கள்.
ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, மனிதர்களுக்கு இருந்த மகிழ்ச்சி, வயது கூடக்கூட குறைந்து கொண்டே வருகிறது. காலப்போக்கில், மகிழ்ச்சியாய் இருக்கிற நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. நீங்கள் எதைச் செய்தாலும், அது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்று நம்பிச் செய்கிறீர்கள். ஆனால், அவை மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை. அப்படியானால், உங்களை நீங்கள் நிர்வகிக்கிற முறை சரியில்லை என்று தான் பொருள். நீங்கள் பெறுகிற கல்வி, செய்கிற வேலை, உருவாக்குகிற குடும்பம், தேடுகிற லட்சியம் இவை எல்லாமே மகிழ்ச்சிக்காகத் தான். இத்தனைக்கும் பிறகு, மகிழ்ச்சி குறைகிறதென்றால் உங்களை நீங்களே மோசமாக நிர்வகிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்.
இன்று எங்கே போனாலும், மனஅழுத்தத்தை நிர்வகித்தல் குறித்து எல்லோரும் பேசுகிறார்கள். தொழிலையும், குடும்பத்தையும், சொத்தையும் நிர்வகிக்கலாம். ஆனால், மனஅழுத்தத்தை ஏன் நிர்வகிக்க வேண்டும் என்று யோசித்தேன். வாழ்வதற்கு வேறு வழியே இல்லை என்று மக்கள் நினைத்து விட்டார்கள் என்று பிறகு தான் தெரிந்தது.
நீங்கள் செய்கிற செயலால் அழுத்தம் ஏற்படுகிறது. உங்களை நீங்களே மோசமாக நிர்வகிப்பதால் தான் அழுத்தம் வருகிறது. தனது இயங்குமுறைகளை நிர்வகிக்க தெரியாத ஒருவனுக்கே அழுத்தம் ஏற்படுகிறது. இன்று கடைநிலை ஊழியருக்கும், முதல் நிலை நிர்வாகிக்கும் கூட தங்கள் பணிகள் மனஅழுத்தம் தரக்கூடியது என்று கருதுகிறார்கள். உண்மையில், அது பணியில் இல்லை. உங்கள் செயல் பாடுகளை நீங்களே கையாள முடியாத போது, மனஅழுத்தத்திற்கு ஆளாகிறீர்கள்.
வாழ்வை ஒரு விபத்து போல நிகழ்த்தாமல், அதனை எங்கே கொண்டு செல்ல விரும்புகிறீர்களோ, அங்கே செலுத்துவீர்களென்றால் அதற்குத்தான் நிர்வாகம் என்று பெயர். நான்கு பேருக்கு சமையல் நடக்கும் ஒரு சமையல் அறையை நிர்வகிப்பதென்றாலும், பத்தாயிரம் பேர் கொண்ட ஒரு தொழிற்சாலை என்றாலும் அதற்குரிய சூழலை உங்களுக்கு நன்கு நிர்வகிக்க தெரிந்திருக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள பொருட்களையும், மனிதர்களையும்கையாள தெரிந்திருக்க வேண்டும்.
பத்து பேரையோ அல்லது பத்தாயிரம் பேரையோ நிர்வகிக்கிறீர்களென்றால், பத்து அல்லது பத்தாயிரம் மனங்களை நிர்வகிக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் மனதையே உங்களால் நிர்வகிக்க முடியாத போது, பத்தாயிரம் மனங்களை நீங்கள் கையாண்டால், அது பேரழிவாகத்தான் முடியும். இத்தகைய நிர்வாகத்தால் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், நாம் செய்கிற எல்லாமே மனிதகுலத்தின் நலம் கருதித்தான்.
ஒரு கானகத்தில் தற்பெருமை பிடித்த சிங்கம் இருந்தது. அது, ஒரு முயலைப் பிடித்து,"" இந்த காட்டுக்கு யார் ராஜா?'' என்று கேட்டது. பயந்து நடுங்கிய முயல், ""நீங்கள் தான்! நீங்கள் தான்! நிச்சயமாய் நீங்கள் தான்!'' என்றது. இதுபோல ஒரு நரி, மற்றும் சில விலங்குகளைப் பிடித்து இதே கேள்வியைக் கேட்டது.
எல்லா விலங்குகளும் பயத்தில், ""நீங்கள் தான் ராஜா'' என்று கூறின. இதனால் முழுகானகமே தன் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டது என்ற சந்தோஷத்தில் உற்சாகமாய் நடைபயின்றது சிங்கம். சற்று தூரத்தில், ஒரு யானை வந்தது. அதனிடமும், ""இந்த காட்டுக்கு யார் ராஜா?'' என்று சிங்கம் கேட்டது. யானை தன் துதிக்கையால் சிங்கத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி வீசி எறிந்தது. தட்டுத் தடுமாறி எழுந்த சிங்கம், ""கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி இருக்கலாமே'' என்றது. அதற்கு யானை, ""நான் தெளிவாகச் சொல்ல வேண்டுமில்லையா! அதற்காகத்தான்!'' என்றது. எனவே, பலத்தைக் காட்டுவதற்குத் தான் நிர்வாகம் என்று பலரும் எண்ணுகிறார்கள். அதை எந்த முட்டாளும் செய்யலாம். ஒரு சூழ்நிலையை நீங்கள் நிர்வகிக்கிற போது, அங்கே செயல்கள் நடந்தால் மட்டும் போதாது. அங்கிருப்பவர்கள் தங்கள் நிலை உயர்ந்திருப்பதாக கருத வேண்டும். ஓரிடத்தைநிர்வகிக்கிறீர்களென்றால், நீங்கள் அற்புதமான மனிதராகத் திகழ வேண்டும். அது நிகழவில்லையென்றால், நீங்கள் ஒரு நல்ல நிர்வாகி இல்லை.
- முற்றும்

உன் வாழ்க்கை உன் கையில் -
வாழ்வில் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் தடைகளைத் தவிர்க்க முடியாது. ஆன்மிகம் தான் என்றில்லை, எந்த செயலுக்கும் இது பொருந்தும். ஆனால், தவறான கோட்பாடுகள், கருத்துக்கள் பாம்பின் ஷத்தை விட மோசமானவை என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. ஒருமுறை இவ்வாறு நடந்தது.
சாத்தான் தன் செய்து வந்த வியாபாரத்தை விட்டுவிட நினைத்தது. வியாபார கருவிகளை எல்லாம் விற்றுவிட எண்ணி "இவை விற்பனைக்கு' என்று எழுதி வைத்தது. கோபம், பொறாமை, வெறுப்பு, பேராசை,
சுயநலம், ஆணவம் இப்படி பல பொருட்கள் விற்பனைக்கு வந்தன. மக்களும் விருப்பமாக பொருட்களை சாத்தானிடம் வாங்கினர்.ஆனால், இரண்டே இரண்டு பொருட்கள் மட்டும் சாத்தானின் பையிலிருந்து வந்தது. ""அவற்றை ஏன் விற்பனைக்கு வைக்கவில்லை?'' என்று கேட்டனர். அவை விற்பனைக்கு அல்ல. மன அழுத்தமும், உற்சாகம் இழப்பதும் தான் அவை. சாத்தான் விற்பனைக்கு வைக்காத அவ்விரு பொருட்களையும் கூட உங்களில் பலரும் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் மீதும், உங்களை சுற்றியுள்ளவர்கள் மீதும் அதைத் தொடர்ந்து பிரயோகிக்கிறீர்கள். துரதிர்ஷ்டமாக தன்னை அறிவு ஜீவிகளாக நினைப்பவர்களும் கூட உற்சாகம் இழந்து, மன அழுத்தத்தோடு சிரமப்படுகின்றனர். தர்க்கரீதியாக நீங்கள் வாழ்க்கையை பிளவுபடுத்திக் கொண்டிருந்தால் உற்சாகமின்மை உண்டாகிவிடும்.
வாழ்க்கை தற்போது எப்படி உள்ளதோ, அதை அப்படியே உணரப் பழகிகொள்ள வேண்டும். இப்போதைய கனம் எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருமுறை ஒரு கிராமத்துக்கு, நாடாளும் மன்னன் வருகை தரப்போவதாக அரண்மனை ஆட்கள் தெரிவித்தனர். எளிமையான அந்த மக்கள், மன்னனிடம் முட்டாள்தனமாக நடந்து கோபத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்தனர். அதனால் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த சங்கரன்பிள்ளை என்பவரை கிராமத்தின் பிரநிதியாக இருக்க கேட்டுக் கொண்டனர்சம்மதம் தெரிவித்த சங்கரன்பிள்ளைஅரசன் வரும் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். அரண்மனை ஆட்கள் சங்கரன்பிள்ளையிடம், ""மன்னர் உங்களிடம் மூன்று கேள்வி கேட்பார். முதலில் வயது என்ன என்பார் கேட்பார், அதற்கு எழுபது என்று மட்டும் தான் கூறவேண்டும் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட கூற கூடாது. இரண்டாவதாக, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்பார். நீங்கள் "ஆறு' என்று மட்டும் கூற வேண்டும். மூன்றாவது கேள்வியாக இந்த ஆண்டு மழை எப்படி இருக்கிறது என்பார். நீங்களும் நன்றாக உள்ளது என்று கூற வேண்டும்,'' என்றனர்.
சங்கரன்பிள்ளையும் ஒத்துக் கொண்டார். அரண்மனை ஆட்கள் மன்னனிடம்,"" மன்னா! கிராமத்து மக்கள் உங்களை பார்க்க அளவு கடந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அறியாமையால் தவறாகப் பேசினாலும்கோபம் கொள்ளாதீர்கள், கிராமத்து பிரதிநிதியிடம் அவருடைய வயது, எத்தனை குழந்தைகள், மழை நிலவரம் மட்டும் கேளுங்கள். அதுபோதும்,'' என்று கூறி அழைத்து வந்தனர்.
மக்களை சந்தித்த அரசர், மக்களிடம்,"" உங்கள் பிரதிநிதி யார்?'' என்று கேட்டார். கூட்டத்திலிருந்து எழுந்து வந்தார் சங்கரன்பிள்ளை.
அவரிடம் மன்னன், ""உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?'' என கேட்டார். ""எழுபது'' என்றார் சங்கரன்பிள்ளை.
"" உங்கள் வயது என்ன?'' என்று கேட்டார் மன்னர். அவர்,"ஆறு' என்று ஒருவார்த்தையில் முடித்துக் கொண்டார். மன்னர் கோபமாக,"" உங்களுக்கு என்ன பைத்தியமா?''என்று கேட்டார். சங்கரன் பிள்ளையும்,""நன்றாக உள்ளது,'' என்றார். மன்னர் மிகுந்த
கோபமடைந்து, "இந்த ஆள் சரியான பைத்தியம், கிராமத்து பிரதிநிதியாக இவன் ஏன் இருக்கிறான்,'' என்றார். சங்கரன்பிள்ளையும் மன்னனிடம்,"" நீங்கள் தான் பைத்தியக்காரன். நான், பதிலை வரிசையாகத்தான் கூறினேன். நீங்கள் தான் தவறாக கேள்விகளைக் கேட்கிறீர்கள்,''என்றார்.
நம் மனம் கடந்த காலத்திலேயே நின்று கொண்டு செயல்படுகிறது.
மனதின் போக்கில் போனால் நாம் குழப்பமாகிவிடுவோம். நான் தர்க்கமனத்தைப் பற்றித் தான் சொல்கிறேன்.
தர்க்கரீதியாக யோசிப்பது என்றால், ஒவ்வொரு நாள் காலையிலும் கண் விழித்தவுடன் பல் துலக்குகிறீர்கள். காலைக்கடமைகளைச் செய்கிறீர்கள். சாப்பாடு, வேலை, சாப்பாடு, தூக்கம் என்று நாள் முழுக்க ஏதோ ஒன்றில் ஈடுபடுகிறீர்கள். இப்படி ஆண்டுக்கணக்கில் செய்கிறோம்.
இச்செயல்களைத் தொடர்ந்து செய்வதில் என்ன மதிப்பிருக்கிறது? சில கணநேர அனுபவங்களும் இதற்கிடையில் உண்டு. சூரியோதயம், வானில் வட்டமிடும் பறவைகள், தோட்டத்தில் பூத்த புதுமலர்கள், மழலை பேசும் குழந்தையின் முகம் என்று மகத்தான விஷயங்களால் இந்த வாழ்க்கை மதிப்புடையதாகவும் எண்ணத் தோன்றலாம். ஆனால், இதெல்லாம் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள்.
தர்க்கரீதியாக எண்ணும் போதெல்லாம் மன அழுத்தம் அதிகமாகி உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்கிறீர்கள். யாரொருவர் தன்னையும், தனக்கு சாத்தியமான சூழ்நிலையையும் மதித்து நடக்கிறாரோ அவரே அனைத்திற்கும் மதிப்பளிக்கும் இயல்புடையவராக இருப்பார்.
எப்படியோ வாழ்க்கைக்குள் நுழைந்து விட்டீர்கள். வாழ்வைப் புரிந்து கொள்வது என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. அதில் சிக்கல் என்பது நீங்களாகவே உருவாக்கிக் கொண்டது. பின் நீங்களே அதற்கு தீர்வு தேடி அலைகிறீர்கள். நீங்களே திருடனாகவும் இருக்கிறீர்கள். காவல்காரனாகவும் செயல்படுகிறீர்கள். திருடன்பிடிபடுவானா? ஒருபோதும் மாட்டான். தர்க்க மனத்தின் தன்மையும் அப்படித்தான்!
-தொடரும்

உன் வாழ்க்கை உன் கையில் - சத்குரு ஜக்கி வாசுதேவ்
ஒரு நல்ல பெற்றோராக எப்படி இருப்பது? உண்மையில், பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரை யாரும் இருந்ததைவிட, நான் ஒரு நல்ல பெற்றவராக அல்லது பெற்றவளாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொருவரும் முயற்சிக்கிறீர்கள். ஆனால், இதுவரை யாருக்குமே, குழந்தைகளை வளர்ப்பதில் எது சிறந்த வழி என்று தெரிந்திருக்கவில்லை. உங்களுக்கு 12 குழந்தைகள் இருந்தாலும் நீங்கள் இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். 11 குழந்தைகளை நன்றாக வளர்த்திருப்பீர்கள். ஆனால், அந்த 12வது உங்களுக்கு நிறைய வேலையை கொடுக்கலாம். எனவே உங்கள் வேலையை இன்னமும் சிறப்பாக செய்ய ஆசைப்படுகிறீர்கள். அப்படி சிறப்பாக நீங்கள் என்ன செய்யமுடியும்?
அதற்கு முன் முக்கியமாக உங்களையே நீங்கள் ஒருசில விஷயங்களில் கவனித்து சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்கு போதுமான நேரம் செலவு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? எப்படி உட்காருகிறீர்கள்? எப்படி நிற்கிறீர்கள்? எப்படி பேசுகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்ன செய்யவில்லை.... எல்லாவற்றையும் நன்கு கவனியுங்கள். ஏனெனில், குழந்தைகள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் மிக வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் நீங்கள் செய்வதை எல்லாம் மிகைப்படுத்தியும் செய்வார்கள். எனவே உங்களை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள். மகிழ்ச்சி, அன்பு, கவனிப்பு, அக்கறை, கட்டுப்பாடு கொண்ட ஒரு சூழ்நிலையை உங்களுக்கும், உங்கள் வீட்டு சூழ்நிலைக்கும் நீங்கள் ஏற்படுத்தினால் நிச்சயமாக குழந்தைகளும் வளர்ச்சி பெறுவார்கள். உங்கள் எல்லைகளுக்குட்பட்டு எவ்வளவு வாய்ப்புகளை உருவாக்கித் தரமுடியுமோ அவ்வளவு வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். ஆனால், அடக்கமான குழந்தையை வளர்க்கிறீர்களா? அல்லது அடங் காப்பிடாரியை வளர்க்கிறீர்களா என்பதும் மிகவும் முக்கியமானதுதான். உங்கள் மனைவி கர்ப்பமடைந்துவிட்டால், நீங்கள் உங்களையே மாற்றிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஏனெனில், இன்னொரு உயிர் இப்போது உங்கள் குடும்பத்திற்குள் வருகிறது. நீங்கள் தற்போது இருக்கும் வழி உங்களுக்கே பிடிக்காதபோது இன்னொரு உயிரும் அந்த வழியில் போகவேண்டாமல்லவா? எனவே நாம் செய்யக்கூடிய செயல்களில் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம். அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுபற்றியும் நான் சொல்கிறேன். அவர்கள் எதைப்பற்றியும் கேள்வி கேட்கும்படி நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் அவர்களின் கேள்வி சந்தேக மனப்பான்மையில் இருக்கக்கூடாது. தெரிந்துகொள்ளும் மனப்பான்மையில் இருக்க வேண்டும். கேள்வி கேட்பது என்பது ஒரு நோயைப் போலவும் ஆகலாம். அல்லது ஒரு ஆரோக்கியமான செயலாகவும் முடியலாம்.
"எல்லாமே மோசம்' என்று மக்கள் ஏற்கனவே சந்தேகத்துடன் இருப்பதால்தான் கேள்வி கேட்கிறார்கள். இது ஒரு நோய். ஆனால் ஒரு கேள்வியின் அடிப்படை நோக்கம், இன்னமும் சிறிது ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் தங்கள் மனதில் தோன்றும் எதைப்பற்றி வேண்டுமானாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து கேள்வி கேட்கலாம் என்ற நிலையை கொண்டுவந்தால் அவர்கள் ஆரோக்கியமான வழியில் கேள்விகேட்க ஆரம்பிப்பார்கள். நல்ல வழியில் அவர்களுடைய அறிவை உபயோகிப்பார்கள். நீங்கள் இப்படிசெய்வதால் அவன் ஒரு டாக்டராகிவிடுவான் அல்லது இன்ஜினியர் ஆகிவிடுவான் என்று நினைத்துவிடக்கூடாது. ஆனால் அவனுடைய மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். எதிலும் விருப்பமுடனும், திறந்த மனதுடனும் இருக்குமாறு அவனை வளர்த்தால் அவன் தன்னுடைய வாழ்க்கையை எந்த அளவு முடியுமோ அந்த அளவு சிறப்பாக அமைத்துக் கொள்வான். வேறு யார் போலவோ ஆகாவிட்டாலும் அவனால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்வான். ஆனால் இவையெல்லாம் அவன் தன் பாதையில் யாரை சந்திக்கிறான், எந்தெந்த சூழ்நிலைகளை பார்க்கிறான், ஆன்மிக சூழலை பார்க்கிறானா, போர் முனையைப் பார்க்கிறானா, இவை அனைத்தையும் பொறுத்தது. ஏனெனில் இவையெல்லாம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லை அல்லவா? நீங்கள் உங்கள் குழந்தையை அன்பு, தியானம், திறந்த மனது போன்ற சூழ்நிலைகளுடன் வளர்த்தால் அவர்கள் பொதுவாகவே நன்றாகத்தான் வளர்வார்கள். அவன் யாரையோ பார்த்து ஏதோ ஒரு சூழ்நிலையில் சிக்கி, தவறாகப் போகிறான் என்றால் அது வேறு விஷயம். ஆனால் அவன் உங்களைப் பார்த்து தவறான வழியில் சென்றுவிடக்கூடாது அல்லவா? நீங்கள் அவர்களுக்குள் பயத்தையோ பாரபட்சத்தையோ, வெறுப்பையோ கொண்டுவந்தால், அது நீங்கள் அவனுக்கு செய்யும் குற்றமாகும். ஏனென்றால் இப்போது உங்களால் அவர்கள் பாதை தவறிப் போக முடியும். எந்தப் பெற்றோருமே இதைத் தன் குழந்தைக்கு செய்யக்கூடாது. ஆனாலும் இது பலவிதமாக நடைபெறத்தான் செய்கிறது. நீங்கள் உங்கள் பயத்தையும் உங்களுடைய "இது', "அது' போன்ற குறைகளை எல்லாம் அவர்களுக்குள் விதைக்கிறீர்கள். உங்களுடைய பலவீனத்தை அடுத்த தலைமுறைக்கு மாற்றுகிறீர்கள். இது உங்கள் வேலையினால் இருக்கலாம். நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள் என்பதுபோல பல விஷயங்கள் இருக்கலாம். எல்லா பெற்றோருமே தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான திறமையைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, குழந்தைகள் சிறப்பாக வளர நிறைய இடங்களை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இம்மாதிரி இடங்களை உருவாக்க தொழில் ரீதியாக யாரையும் ஆசிரியர் போல நியமித்து செய்ய முடியாது. அவர்கள் இன்னொருவர் குழந்தைக்காக தன்னைக் கொடுக்க மாட்டார்கள். இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுள்ள தன்னார்வ தொண்டர்களை வேண்டுமானால் நியமிக்கலாம். இது ஒரு சவாலான வேலைதான். ஆனால் அடுத்த தலைமுறையின்மேல் அக்கறை கொண்டவர்கள் இதை செய்யத்தான் வேண்டும். அடுத்த தலைமுறையில் வளர்பவர்கள் உங்களையும் என்னையும் விட ஒருபடி மேலாக இருக்க வேண்டும். அவர்கள் அதிக ஆனந்தத்துடனும்,குறைந்த பயத்துடனும் குறைந்த துன்பத்துடனும், குறைந்த வெறுப்புடனும் இருக்கவேண்டும். இதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். உங்களுக்கு இரண்டுகுழந்தைகள் என்றால், அவர்களை அடுத்த தலைமுறைக்கு நீங்கள் விட்டுச்செல்லும் நன்கொடையாக இருக்க வேண்டும். அடங்காப் பிடாரிகளாக இருக்கக்கூடாது. உங்களைவிட சிறிதளவாவது உயர்ந்த மனிதர்களை நீங்கள் விட்டுச் செல்வதுதான், இந்த மனித சமுதாயத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய பெரிய பங்களிப்பாக இருக்கும். -வாழ்வு தொடரும்

ஒவ்வொரு வடிவத்திற்கும் ஓர் அதிர்வு இருக்கிறது. அந்த அதிர்வைப் பொறுத்து அது குறிப்பிட்ட குணத்தைப் பெறுகிறது. உதாரணமாக, ஒரு கைக்குட்டையை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிடித்திருந்தால் ஒருவிதமான அதிர்வை அது பெறுகிறது. வேறுவிதமாக பிடித்திருந்தால் வேறுவிதமான அதிர்வை பெறுகிறது. நீங்கள் சிறிது சூட்சும தன்மை வாய்ந்தவராக இருந்தால் அதை அனுபவ பூர்வமாக உணர முடியும். அதை பிடிப்பதற்கேற்றவாறு அதன் அதிர்வே மாறுகிறது. அதேபோன்று கிரகங்களுக்கும் தனித்தன்மையான அதிர்வுகள் உள்ளன. எனவே ஒரு கிரகத்தில் சில செயல்கள் நடக்கும்போது, அப்போது இருக்கும் கிரகத்தின் நிலையைப் பொறுத்து உங்கள் மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இது எப்படி என்றால், பவுர்ணமியின்போதும் அமாவாசையின்போதும் மனச்சஞ்சலம் உள்ளவர்கள் மேலும் அதிக சஞ்சலம் கொள்வதை கவனித்திருக்கிறீர்களா?
இயற்கையாகவே மனச்சஞ்சலம் உள்ளவர்கள் அந்த குறிப்பிட்ட நாட்களில் மேலும் சஞ்சலப்படுகிறார்கள். அவர்களோடு உங்களை நீங்கள் ஒப்பிட்டுக்கொண்டால், மனதளவில் நீங்கள் ஓரளவு வலிமையானவர்கள். ஆகையால்தான் நிலா எங்கிருந்தாலும் உங்களுக்குள் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. அதேநேரம் மனபலம் உள்ளவர்கள் எந்த கிரகமும் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். அவரவர் தன்மையின்படிதான் இருப்பார்கள். கீழான சக்திகள் அவர்களை ஆளமுடியாது.
கிரகங்கள்,நட்சத்திரங்கள் இவை எல்லாம் கல், மண் போல வெறும் ஜடப்பொருள்தான் இல்லையா? ஜடப்பொருள் வலிமையானதா? அல்லது மனிதனின் தன்மை வலிமையானதா? யார் யாரை ஆள வேண்டும்? மனிதத்தன்மை உயிரற்ற பொருட்களை ஆள வேண்டுமா அல்லது உயிரற்ற பொருட்கள் மனிதத்தன்மையை ஆளவேண்டுமா? என்ற கேள்வி எழும்போது மனிதத் தன்மைதான் உயிரற்ற பொருட்களை ஆள வேண்டும் என்ற பதில் வரும். இப்படி நினைப்பவர்கள் நட்சத்திரங்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும், கிரகங்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று உறுதியாக இருப்பார்கள். அப்படி இருப்பவர்களே வாழ்க்கையை விரும்பியவாறு உருவாக்கிக் கொள்ள முடியும்.
எண் ஜோதிடம் என்பது என்ன? நமது வசதிக்காக,நமது கைவிரல்கள் கொண்டு எண்ணுவதற்காக, எண்களை நாம் உருவாக்கினோம். நமக்கு 10 விரல்கள் இருப்பதால்தான் 10 எண்கள் வந்தன. 14 விரல்கள் இருந்திருந்தால்,எட்டு, ஒன்பது, டாம், டூம் என்று 14வரை உருவாக்கியிருப்போம். இந்த எண்கள் அனைத்தும் நமது வசதிக்காக நாம் உருவாக்கிய கருவிகளே. இந்த கருவிகள் நம்மை ஆளவிடலாமா?
சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாருதி காரை விற்க முடிவெடுத்தேன். எனக்குத் தெரிந்த ஒருவரே அதை வாங்க விரும்பினார். அந்த வாகனத்தை நான் நன்கு பயன்படுத்திவிட்டதாகவும் எனவே பரிசோதித்துவிட்டு முடிவைக் கூறுமாறும் அவரிடம் கூறினேன். அதற்கு அவர்,தேவையில்லை. நீங்கள் என்றைக்கு அந்த வண்டியை வாங்கினீர்களோ, அன்றைக்கே நீங்கள் இதை விற்கும்போது நான் வாங்கவேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன். உங்கள் வண்டி அற்புதமான எண்ணைப் பெற்றிருக்கிறது, என்றார்.
நான் அவரிடம் சொன்னேன், ""எண் எப்படியோ இருக்கட்டும், நீங்கள் வண்டியை ஓட்டிப்பார்த்துவிட்டு, பிறகு முடிவெடுங்கள்,'' என்றேன். அதற்கு அவர், ""இல்லையில்லை. வண்டியின் எண் 333, மற்றும் என் பிறந்தநாள் 3ம் மாதத்தில் 3ம் தேதி. எனவே அன்று பகல் 11.45க்கு வந்து வண்டியை பெற்றுக் கொள்கிறேன்'' என்று கூறினார். அந்த மனிதரின் நிøயைப்பார்த்த நான், அந்த மனிதரை அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. வெளியில் உள்ளது கார் பதிவு எண்தான் என்றும், அது எப்போதும் மாற்றத்தக்கது என்றும், உண்மையான காரின் எண் இன்ஜினிலும் சேசிசிலும் மட்டும்தான் இருக்கும் என்று கூறினேன். இப்போது அவர் மிகவும் குழம்பிவிட்டார். தன் நியூமராலஜி குருவிடம் சென்று நடந்ததையெல்லாம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த குரு காரின் பதிவு எண் மட்டுமே போதுமானது
என்று சொல்லிவிட்டார். எனவே அவர் திரும்பிவந்து அந்த எண்ணே போதுமானது என சொல்லி வண்டியை வாங்கிவிட்டார். அதற்கு விலையாக ஒரு லட்சம் கொடுப்பதாக கூறிச் சென்றார். நானும் சரி சென்று சொல்லிவிட்டேன். பிறகு அவர் எனக்கு பணமாக கொடுக்கும்போது ஒரு லட்சத்திற்கு ஒரு ரூபாய் குறைவாக கொடுக்க இருப்பதாக கூறினார். ஏனெனில் 999 என எண்கள் முடிய வேண்டுமாம். நானும் சரி என்று கூறிவிட்டேன். ஆனால் ஒரு ரூபாய் குறைத்துக் கொடுப்பது அவருக்கு மிகவும் மன உறுத்தலாக இருக்கவே, பணத்துடன் ஒரு பெரிய பரிசுப் பொருளையும் சேர்த்து கொடுத்தார். ""சரி, ஏதோ செய்துகொள்ளுங்கள். நீங்கள் வண்டியை சந்தோஷமாக எடுத்துச் சென்றால் அதுவே எனக்கு பெரிய சந்தோஷம்,'' என்று கூறிவிட்டேன்.
ஒரு நாள் அவர் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தபோது இருக்கை திடீரென பின்னால் சரிந்துவிட்டது. அவருக்கு மிகவும் பயம். ஏதோ தீய சக்தி பின்னாலிருந்து இழுத்ததாக பயந்தார். ஒரு மாதம் கழித்து தற்செயலாக அவர் வீட்டிற்கு சென்றபோது, கார் நன்றாக ஓடுகிறதா என கேட்டேன். அப்படி ஒரு தீய செயல் நடந்ததால் காரை விற்றுவிட்டதாக பதில் கூறினார். இயந்திர பழுதால்தான் இருக்கை பின்னால் போய்விட்டது என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை.
நீங்கள் எப்போதும் பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பதால்தான் ஜாதகமும் எண் ஜோதிடமும் உங்கள் வாழ்க்கையில் ஆட்சிசெய்கின்றன. அன்பு, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் நீங்கள் வாழவில்லை. உங்களுக்குள் அடிப்படையாக பயம் இருக்கும்போது உங்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லி நான் நம்பவைக்க முடியும். தினமும் நீங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது உங்கள் சுண்டுவிரலை எடுத்து மூன்றுமுறை வாயில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையானால்.... என்ன நடக்கும் என்று தெரியாது. இதையே ஒரு பயமுறுத்தலுடன் இந்த செய்கைக்கு மர்மமான ஒரு விளக்கமும் கொடுத்து சொன்னால் உங்களில் பெரும்பாலானோர் நிச்சயமாக இதை செய்யத் துவங்குவீர்கள். பல சுண்டுவிரல்கள் மிகவும் சுறுசுறுப்பாகிவிடும். உங்கள் உள் தன்மையை நீங்கள் மதிப்பதில்லை. ஜடப்பொருட்களும் நீங்கள் உருவாக்கிய எண்களும்
உங்களுக்கு மிக முக்கியமானவை ஆகிவிட்டன. அவை உங்களை ஆட்சி செய்கின்றன.
உங்களுக்குள் இருக்கும் அனைத்துக்கும் மேலான ஒன்றுக்கு நீங்கள் மதிப்பளிப்பதில்லை. ஒன்று, இரண்டு, மூன்று , நான்கு .... இப்போதைக்கு உங்கள் வாழ்வில் மிக முக்கியமானவையாக மாறிவிட்டன

Subscribe to:
Posts (Atom)