Showing posts with label மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில். Show all posts
Showing posts with label மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில். Show all posts

Monday, May 21, 2012

மனைவி மகிழ்ச்சியாக இருக்கும் வீட்டில் நல்லதே நடக்கும்.

                                   
                 கட்டிய மனைவியை மதிக்காதவன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.மகாபாரதத்தில் தர்மராஜருக்கு ஈடான பாத்திரம் இல்லை. அவர் மிகவும் பொறுமையானவர் தான்.பரமாத்மா கிருஷ்ணனுக்கே அவர் மைத்துனர். தர்மம் தவறி காரியம் செய்யாத மாமன்னர். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தர்மம் செய்வதற்கென்றே ஒதுக்கியவர். அப்படிப்பட்ட மகானுபாவன், ஒரு இக்கட்டான நிலையில், அரச தர்மத்திற்கு உட்பட்ட சூதில் இறங்கினார். அது அவரது உரிமை. ஆனால், சில எல்லைகளை மீறி தன் மனைவியை வைத்து சூதாடி விட்டார். விளைவு திரவுபதி பலரது முன்னிலையில் துகிலுறியப்பட்டு அவமானப்படுத்தப்பட்டாள். விளைவு அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. கட்டிய மனைவியை சூதாட்டத்தில் பந்தயப் பொருளாக வைத்தது பெரும்பாவம். அந்த பாவத்தின் பலனை அவர் அனுபவித்தார்.
                  அது மட்டுமா? தாய்க்கு சமமாக மதிக்க வேண்டிய சொந்த அண்ணியை துகிலுறிந்த மைத்துனர்களும் அழிந்தார்கள். ஒரு பெண் அவமானப்படுத்தப்படும் நாடு வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.
                                     
                   ராமாயணத்தில், ராமச்சந்திர பிரபு ஏகபத்தினி விரதனாக, சீதாவே கதியென இருந்தார். அதனால் தான் இன்றும் அனைவர் வாயிலும் ஸ்ரீராமஜெயம் மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது.