* நம்முடைய இந்த பிறவியில் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் பலன்கள் முந்தைய பிறவியில் நாம் செய்த நல்வினை, தீவினை ஆகியவற்றையும் பொறுத்தது. இதனைப் பிராரப்தம் என்று சொல்வார்கள். * இந்தப் பிறவியின் அமைப்பு முன் ஜென்மத்தை பொறுத்தது என்றால், அதன் பலாபலன்களை நமது முயற்சியால் சாதகமானதாக, பக்குவமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு புருஷார்த்தம் என்று பெயர். * ஆற்றில் நீர் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வேகமாக ஓடுவது போன்றது பிராரப்தமாகும். வாழ்க்கைப்பயணமும் இதைப் போன்றே நமக்கு அமைந்து விடுகிறது. * இருந்தாலும்கூட, நீச்சல் தெரிந்தவன் நீரின் ஓட்டத்திற்கு எதிர்திசையில் பயணம் செய்ய முயற்சிப்பதைப் போல, பயிற்சியாலும், முயற்சியாலும் நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் நமக்கு உண்டு. அதனால், வாழ்க்கையின் போக்கினை மாற்றவேண்டுமானால் நீங்களும் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். * வாழ்க்கையை நெறி தவறாமல் வாழ்ந்து, நமது முயற்சியைக் கடமை உணர்வுடன் மேற்கொண்டு செயலாற்றி, முடிவை இறைவனுக்கு அர்ப்பணிப்பவன் நிச்சயம் முன்வினைப் பயனாகிய பிராரப்த வினை ஏற்படுத்தும் தடைகளை வெல்ல முடியும். சின்மயானந்தர்
Showing posts with label நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள். Show all posts

Saturday, November 10, 2012
நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள்
* நம்முடைய இந்த பிறவியில் வாழும் வாழ்க்கையில் ஏற்படும் பலன்கள் முந்தைய பிறவியில் நாம் செய்த நல்வினை, தீவினை ஆகியவற்றையும் பொறுத்தது. இதனைப் பிராரப்தம் என்று சொல்வார்கள். * இந்தப் பிறவியின் அமைப்பு முன் ஜென்மத்தை பொறுத்தது என்றால், அதன் பலாபலன்களை நமது முயற்சியால் சாதகமானதாக, பக்குவமாக மாற்றிக் கொள்ளலாம். இதற்கு புருஷார்த்தம் என்று பெயர். * ஆற்றில் நீர் ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வேகமாக ஓடுவது போன்றது பிராரப்தமாகும். வாழ்க்கைப்பயணமும் இதைப் போன்றே நமக்கு அமைந்து விடுகிறது. * இருந்தாலும்கூட, நீச்சல் தெரிந்தவன் நீரின் ஓட்டத்திற்கு எதிர்திசையில் பயணம் செய்ய முயற்சிப்பதைப் போல, பயிற்சியாலும், முயற்சியாலும் நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் நமக்கு உண்டு. அதனால், வாழ்க்கையின் போக்கினை மாற்றவேண்டுமானால் நீங்களும் நீச்சல் கற்றுக் கொள்ளுங்கள். * வாழ்க்கையை நெறி தவறாமல் வாழ்ந்து, நமது முயற்சியைக் கடமை உணர்வுடன் மேற்கொண்டு செயலாற்றி, முடிவை இறைவனுக்கு அர்ப்பணிப்பவன் நிச்சயம் முன்வினைப் பயனாகிய பிராரப்த வினை ஏற்படுத்தும் தடைகளை வெல்ல முடியும். சின்மயானந்தர்
Subscribe to:
Posts (Atom)