Showing posts with label நல்ல நண்பனின் அடையாளம். Show all posts
Showing posts with label நல்ல நண்பனின் அடையாளம். Show all posts

Wednesday, February 1, 2012

நல்ல நண்பனின் அடையாளம்


                    உங்களது தவறையும், குறையையும் ஒப்புக் கொள்ளுங்கள், அவ்வாறு செய்தாலே நீங்கள் திருந்த வழிபிறக்கும்.
* தன்னலமற்ற, பணிவுடைய தொண்டினால் இதயத்தைத் தூய்மைப்படுத்துங்கள், புலனின்பம் ஒரு பொழுதும் நிறைவைத் தராது என்பதை உணரக் கற்றுக் கொள்ளுங்கள்.
* மனிதனின் கற்பனைக்கு எட்டாதவராக விளங்குகிறார் கடவுள். ஆனால் அவர் வாழும் உண்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* மனித முயற்சியைத் தெய்வீகத் திருவருள் தாங்கி நிற்க வேண்டும். அப்பொழுது தான் இறையருளை பெறுவது சாத்தியப்படும்.
* படுமோச நிலையையும் வீரமுடன் எதிர்த்து நில்லுங்கள், சிறந்தவற்றைப் பெறத் தைரியத்துடன் போராடுங்கள்.
* நல்ல நண்பன் உங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்வதோடு, உங்கள் சங்கடத்தில் பங்கும் கொள்கிறான்.
- சிவானந்தர்